ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: திரையரங்குகளுக்கு 100% அனுமதி இல்லை!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டிசம்பர் 31 வரை தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருந்தது தெரிந்ததே. இன்றுடன் அந்த ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததை அடுத்து ஜனவரி 31 வரை தற்போது ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வேறு எந்த புதிய சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை என்பதும் கடந்த முறை அறிவிக்கப்பட்ட சலுகைகளே மீண்டும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

குறிப்பாக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்கப்படும் என்றும், அல்லது குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீத இருக்கைகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விதமான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜனவரி 31ஆம் தேதி வரை 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே திரையரங்குகளில் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. இதனால் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்களின் வசூல் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

theater

மேலும் மெரீனாவில் காணும் பொங்கல் கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தேவையான அளவு தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிதுள்ளது. இதனால் படப்பிடிப்பிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது என்பதும் அதேபோல் வழிபாட்டு தலங்களில் வழக்கமான நடைமுறைகளின்படி பொதுமக்களை அனுமதிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web