தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

 
lockdown

தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீடிப்பதாக சற்றுமுன் அறிவித்துள்ளதை அடுத்து கூடுதல் தலைவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன தளர்வுகள் என்பதை தற்போது பார்ப்போம்

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்புக்கு அனுமதி. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி

சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏசி இன்றி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி/ சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி

உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும் நடைபயிற்சிக்கு அனுமதி

தொழிற்சாலைகள் 33 சதவீதம் பணியாளர்களுடன் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி 
தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் பதிவு மற்றும் அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதி 

செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்

எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது நீக்குவோர், இயந்திரங்கள் பழுது நீக்குவோர் செயல்பட அனுமதி 

lockdown

From around the web