ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள்: முதல்வர் நாளை ஆலோசனை!

 
lockdown

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 3ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து ஜூலை 3ஆம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நாளைய ஆலோசனைக்கு பின் நீட்டிக்கப்படும் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக கொரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 11 மாவட்டங்களில் தற்போது எந்தவித தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அந்த மாவட்டங்களிலும் சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web