கோடியில் கடன் வாங்கியவர் வெளிநாட்டில்: ரூ.4 ஆயிரம் கடன் வாங்கிய வாலிபர் தற்கொலை!

 

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கியவர்கள் கட்ட முடியாது என்று தைரியமாக சொல்லிக் கொண்டு இருப்பதும், நாட்டை விட்டு ஓடி சென்றவர்களும் அதிகம் இருக்கும் நிலையில் ரூபாய் 4000 கடன் வாங்கிய வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து நிலையத்தில் பணிபுரிந்து வரும் விவேக் என்பவர் தந்தையின் மருத்துவ செலவிற்காக சமீபத்தில் ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றில் ரூபாய் 4000 கடனாகப் பெற்று உள்ளார். அதற்கு இணையாக அவரது செல்போனை கண்காணிக்கும் அனுமதியை கடன் நிறுவனத்தினர் பெற்று இருந்ததாக தெரிகிறது 

suicide 1280

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு வட்டியுடன் சேர்த்து 4300 செலுத்த வேண்டிய நிலையில் விவேக்கால் பணத்தை செலுத்த முடியவில்லை. உடனே அந்த ஆன்லைன் நிறுவனத்தின் நிர்வாகிகள் அவரை தொலைபேசியில் அழைத்து அவமானப்படுத்தியதாகவும் மிரட்டியதாகவும் தெரிகிறது

மேலும் அவரது செல்போனை கண்காணித்து, அவர் யார் யாரிடம் அதிகமாக பேசுகிறார்கள் என்பதை கவனித்து அவர்களிடம் நீ கடன் வாங்கிய கூறி அசிங்கப்படுத்துவோம் என்று மிரட்டி உள்ளதாகவும் தெரிகிறது 

இந்த மிரட்டலுக்கு பயந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விவேக் தலைமறைவாகி விட்டதாகவும், இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் தேடியபோது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தற்கொலை செய்வதற்கு முன்னர் ஆன்லைன் கடன் நிறுவனத்தினர் தன்னை டார்ச்சர் செய்வதாக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆன்லைன் நிறுவனத்திடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

ரூபாய் 4000 மட்டுமே கடன் வாங்கிய வாலிபர் ஒருவர் விலைமதிப்பில்லா உயிரை இழந்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web