சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் எப்போது திறக்கப்படும்?

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய குடிநீர் நிறுவனங்கள் சமீபத்தில் தமிழக அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட நிலையில் இந்த குடிநீர் ஆலைகள் மீண்டும் உரிமை கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்த பின்னரே அந்த ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர் குடிநீர் ஆலைகளை திறக்க விண்ணப்பிப்பவர்கள் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் நிலத்தடிநீர் சட்டவிரோதமாக திருடப்பட்டதா
 
சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் எப்போது திறக்கப்படும்?

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய குடிநீர் நிறுவனங்கள் சமீபத்தில் தமிழக அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட நிலையில் இந்த குடிநீர் ஆலைகள் மீண்டும் உரிமை கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்த பின்னரே அந்த ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்

குடிநீர் ஆலைகளை திறக்க விண்ணப்பிப்பவர்கள் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் நிலத்தடிநீர் சட்டவிரோதமாக திருடப்பட்டதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும் இதற்கென ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்

இந்த நிலையில் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web