அமைச்சர் வேலுமணிக்கு ரூ.10 அபராதம் விதித்த நீதிமன்றம்!

 

தமிழக அமைச்சர் வேலுமணிக்கு ரூ.10 மட்டும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழக அமைச்சர் வேலுமணி அறப்போர் இயக்கம் என்ற அமைப்பின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு சுமத்தி வருவதாகவும் தேர்தல் நேரத்தில் தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு ரூபாய் 10 மட்டும் அவரது விதித்தது.

court

டெண்டர் முறைகேடு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக வீடியோ வெளியிட தடை செய்ய கோரி அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அரசியல் உள்நோக்கத்துடன் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகவும் கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு ரூபாய் 10 அபராதம் விதித்தனர். 

அதன்பின் அமைச்சர் வேலுமணியின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த அபராதத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web