விஜயகாந்த் மனைவிக்கும் கொரோனா தொற்று: அதிர்ச்சியில் தொண்டர்கள்

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விஜயகாந்த் அவர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

அடுத்தடுத்து விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் கொரனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அக்கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது 

From around the web