குஷ்புவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் வேண்டுகோள்

 
குஷ்புவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் வேண்டுகோள்

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் கணவரும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான சுந்தர் சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனை அடுத்து குஷ்பு தனது டுவிட்டரில் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் 

குஷ்பு தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறிய போது தனது கணவர் சுந்தர் சி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடல் நிலை சீராக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மருத்துவரின் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் 

sundar c

மேலும் சுந்தர்சி அவர்களுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். சுந்தர் சி நடித்து இயக்கி வரும் ’அரண்மனை 3’ என்ற திரைப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தற்போது அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ’அரண்மனை 3’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் அந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது


 

From around the web