திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!

 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

கொரோனா வைரசால் அரசியல்வாதிகள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதையும் பார்த்தோம். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் அணிந்து வாக்களித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

duraimurugan

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்., மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா என்ற தகவல் அவரது கட்சியின் தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web