கொரோனா பரவல் எதிரொலி: இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

 
coimbatore

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பாக கோவையில் நேற்று 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கோவையில் இன்றும் நாளையும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் 

கோவையில் இன்றும் நாளையும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முப்பத்தி ஆறு இடங்களில் நகை கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும், அதே போல் பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆனால் அதே நேரத்தில் அத்தியாவசியமான கடைகளான பால், மருந்து கடைகள் திறப்பதற்கு எந்தவித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு அன்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது கோவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web