கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று-பாதிப்பு விவரம்!

 
kumari rain

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 487 என குறைந்து உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து கொரோனாவால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,354 என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 851 என்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

corona

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மிக விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றுவதே குறிக்கோள் என்று மாவட்ட நிர்வாகம் கூறிவருகிறது.

From around the web