விஜயகாந்துக்கு கொரோனாவா? இறைவனை பிரார்த்திப்பதாக ஓபிஎஸ், சரத்குமார் டுவீட்

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்று செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டதும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என்று தேமுதிக தலைமைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விஜயகாந்த் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் இறைவனை பிரார்த்தனை செய்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் தனது டுவிட்டரில், ‘உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

சரத்குமார் தனது டுவிட்டரில், ‘தேமுதிக தலைவரும், அருமை நண்பருமான திரு.விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

From around the web