ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா!

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல்வாதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் தீவிரமாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தனர். இதன் காரணமாக இதில் பலருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி, அதிமுக பிரமுகர் மதுசூதனன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வபெருந்தகை அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

selvaperundhogai

இதனை அடுத்து அவர் தனது வீட்டின் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web