தஞ்சை மாவட்டத்தில் மேலும் சில மாணவர்களுக்கு கொரோனா!

 
தஞ்சை மாவட்டத்தில் மேலும் சில மாணவர்களுக்கு கொரோனா!

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே மாணவ மாணவியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் தற்போது மேலும் சில மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இதுவரை 168 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 12 பேர் பள்ளி மாணவர்கள் என்றும் 5 பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது 

corona

தஞ்சையிலுள்ள 2 பள்ளி மாணவிகள் மற்றும் கும்பகோணத்தில் உள்ள 10 பள்ளி மாணவர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கும்பகோணம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் 5 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

இதனை அடுத்து தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 168 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 185 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் மாணவர்களிடையே தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவது அங்குள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

From around the web