யானைகளுக்கு கொரோனாவா? பரிசோதனை தீவிரம்

 
elephant

சமீபத்தில் சென்னை வண்டலூரில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதனை அடுத்து முதுமலை யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

வனத்துறையினர்களின் உதவிகளுடன் யானைகளின் சளி மாதிரி எடுக்கப்பட்டதாகவும் இதனையடுத்து இந்த மாதிரி உத்தரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் அங்கிருந்து பரிசோதனை முடிவு வந்த பின்னர் யானைகளுக்கு கொரோனா இருக்கின்றதா என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கூறுகையில் ’யானைகள் முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், கொரோனா அச்சம் காரணமாக யானைகளுக்கு தனித்தனியாக உணவு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இங்கு உள்ள முகாமில் மொத்தம் 54 யானைப்பாகன்கள் இருப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் இங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது போலவே யானைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web