காங்கிரஸ் வேட்பாளருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கும் தேமுதிக வேட்பாளர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ஒருவருக்கும் கொரோனா பாதித்துள்ளது 

மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு மற்றும் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதும் இவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

congress

இந்த நிலையில் இன்று வந்த தகவலின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் என்பவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web