தமிழகத்தில் இன்று 17,897 பேருக்கு கொரோனா: சென்னையில் எவ்வளவு?

 
தமிழகத்தில் இன்று 17,897 பேருக்கு கொரோனா: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 17,897 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  11,48,064 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 5,445பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 107 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 13,933 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் தமிழகத்தில் இன்று 15,542 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 10,21,575 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் 135,408 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 221,40,645 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

april 29

From around the web