சமீபத்தில் முக ஸ்டாலினை சந்தித்த தலைவருக்கு கொரோனா உறுதி:

 

சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த அரசியல் தலைவருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இன்று கூட பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கொரோனா தொற்று உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பத்துநாட்கள் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு குண்டுராவ் அறிவுறுத்தியுள்ளார் 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு வந்து இருந்த குண்டுராவ் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web