மீண்டும் களமிறங்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கா?

 
corona

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து தளர்வுகள் இல்லாத ஊரடங்கில் இருந்து தற்போது முற்றிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே 

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெரும் அதிர்ச்சியாக மீண்டும் கொரோனா களம் இறங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு மாவட்டத்தில் கொரோனா அதிகரித்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 

இதனால் தமிழகத்தில் மீண்டும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கொரோனா குறைந்துவிட்டது என மனநிறைவு கொண்டு விடக் கூடாது என்றும் நாட்டின் 66 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கொரோனா அதிகரித்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web