மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வான எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் ஆகியோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதில் ஒருசிலர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் நேற்று நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணன் அவர்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்மிடிபூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கேஎஸ் விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web