கொரோனா 3.0: அமைச்சர் கூறும் அதிர்ச்சி தகவல்!

 
delta

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கும் என மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் தான் கொரோனா 3-வது அலையாக மாறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை பொதுமக்களை வாட்டி எடுத்து விட்ட நிலையில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் மூன்றாவது அலை துவங்கும் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் டெல்டா பிளஸ் என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் இரண்டாவது அலை வைரசை விட பாதிப்பு அதிகம் ஏற்படுத்தும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் மூன்றாவதாக அலையாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் உறுதி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

From around the web