கன்னியாகுமரியில் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்க பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்!

 
vijay vasanth

கன்னியாகுமரி மாவட்ட எம்பி விஜய் வசந்த் அவர்கள் கன்னியாகுமரியில் மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில் அங்கு உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு எடுத்து வருகிறது

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் என்ற பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கலந்துகொண்டார். மீன்வளத் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் இதர அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எம்பி விஜய் வசந்த் அவர்கள் இணையம் புத்தன்துறை என்ற பகுதியில் கடல் சீற்றத்தால் பழுதடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பரம் மார்த்தாண்டன் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web