அக்டோபர் 10-க்குள் கலந்தாய்வு: பொறியியல் கல்லூரிகளுக்கு உத்தரவு!

 
engineering

பொறியியல் படிப்புகளுக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பிற்காக ஜூன் அல்லது ஜூலை மாதம் கலந்தாய்வு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் பிளஸ் டூ மதிப்பெண்களே வரவில்லை அதனால் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் ஏஐடியுசி வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்க ஏஐசிடிஇ உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டிருப்பதால் விரைவில் கலந்தாய்வு குறித்த தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web