காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! சட்டசபையில் பரபரப்பு

 

தமிழக சட்டசபை நேற்று தொடங்கிய நிலையில் நேற்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கியதும் இன்றைய கூட்டத்தின்போது நீட் தேர்வு குறித்து ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது 

கருணாநிதி முதலமைச்சராக இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவில்லை என முக ஸ்டாலின் கூறியதற்கு கடந்த 2010ஆம் ஆண்டு மத்தியில் திமுக-காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வுக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்

உண்மையில் கருணாநிதி 2006ம் ஆண்டு வரை மட்டுமே அவர் முதலமைச்சராக இருந்தார் என்றும், அதன் பின்னர் முதலமைச்சராக இல்லை என்பதும், 2006 வரை இந்தியாவிலேயே நீட் என்ற தேர்வு முறை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது புரியாமல் திமுக தலைவர் பேசி வருவதாகவும் ஒரு சில உறுப்பினர்கள் கூறினார்கள்

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது சபாநாயகர் இருக்க முன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web