யூடியூப் பார்த்து தாயுடன் சேர்ந்து கொள்ளையடித்த கல்லூரி மாணவன்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

யூடியூப் ஐ பார்த்து கல்லூரி மாணவர் ஒருவரும் அவரது தாயார் ஒருவரும் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் ஊரடங்கு காரணமாக தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான கோவைக்கு சென்று உள்ளார். அந்த வீடு சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டது இந்த நிலையில் கோவையில் இருந்து திரும்பி வந்த அந்த ஐடி ஊழியர் தனது வீட்டில் நடந்த கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்
 

யூடியூப் பார்த்து தாயுடன் சேர்ந்து கொள்ளையடித்த கல்லூரி மாணவன்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

யூடியூப் ஐ பார்த்து கல்லூரி மாணவர் ஒருவரும் அவரது தாயார் ஒருவரும் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் ஊரடங்கு காரணமாக தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான கோவைக்கு சென்று உள்ளார். அந்த வீடு சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டது

இந்த நிலையில் கோவையில் இருந்து திரும்பி வந்த அந்த ஐடி ஊழியர் தனது வீட்டில் நடந்த கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்

அப்போது ஒரு வயதான பெண்ணும் ஒரு இளைஞனும் ஆட்டோவில் இருந்து அந்த வீட்டின் அருகே இருந்து ஏறுவதைக் கண்டு பிடித்தனர். இதனை அடுத்து அந்த ஆட்டோ எண்ணை வைத்து அந்த அந்த இரண்டு நபர்களை போலீசார் கண்டு பிடித்த போது அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவன் என்றும் இன்னொருவர் அவரது தாயார் என்றும் தெரியவந்தது

இதனை அடுத்து அந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது யூடியூபில் பார்த்து கொள்ளை அடிப்பது எப்படி என்பது தெரிந்து கொண்டதாக கூறினார்கள். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web