எல்லாம் ஆன்லைன்: கொரோனா குறையும் வரை ஆன்லைன் தான்!

 
college


இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பொதுமக்கள் பயப்பட்டு வருகின்றனர். இதனால் ஆன்லைனில் தான் அதிகபட்சமான பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனா குறையும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு வகுப்புகளும் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளிலும் ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது 

தமிழகத்தில் இயங்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் இதற்கான இணையதளம் இரண்டு நாட்களில் துவங்கப்படும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த கல்வியாண்டின் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்ற நிலையில் இந்த கல்வி ஆண்டை பொருத்தவரை ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை முடிவு செய்ததை அடுத்து ஊரடங்கு அமலில் உள்ளதால் மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பம் வாங்க முடியாது என்பதன் காரணமாக ஆன்லைன் மூலமே விண்ணப்பம் ஏற்பாடுகளை உயர்கல்வித்துறை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கான இணையதளம் ஒன்று உயர்கல்வித்துறை தொடங்க உள்ளது என்பதும் இந்த இணையதளத்தில் அனைத்து மென்பொருள்களையும் இணைக்கப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

From around the web