கொரோனாவுக்கு கோவை சிறுவன் பலி: 3வது அலை ஆரம்பித்துவிட்டதா?

 
corona

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த 13 வயது சிறுவன் பலியாகியுள்ளதை அடுத்து கோவையில் மூன்றாவது அலை ஆரம்பித்துவிட்டதா என்று கிளம்பியிருக்கும் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கடந்த சில நாட்களாக சென்னையை விட அதிகமாக கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்

ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் கோவையில் 13 வயது சிறுவன் இறந்ததால் கோவையில் மூன்றாவது அலை பரவி விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பியது. ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கோவையில் பலியான சிறுவனின் மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்யப்படும் என்றும் கோவையில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக வெளிவரும் செய்தியில் சிறிதும் உண்மை இல்லை என்றும் இது குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web