கூட்டணி கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட் சீட்கள் தான்: திமுக தலைவர் உறுதி!

 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் சிங்கிள் டிஜிட்களில்தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திமுக கூட்டணியில் உள்ள இடது கம்யூனிஸ்ட் மற்றும் வலது கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்த முறை சிங்கிள் டிஜிட் தொகுதிகள் வழங்க திமுக தலைவர் முடிவு செய்துள்ளாராம் 

அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், மதிமுகவுக்கு மூன்று தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது 

dmk allaince

காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதுமட்டுமின்றி பெரும்பாலான கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுவதாகவும், இதனால் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த முறை குறைந்த தொகுதிகள் தான் கிடைக்கும் என வைகோ கூறியுள்ளதும் இதன் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியிலிருந்து தொகுதி உடன்பாடு ஏற்படாமல் பல கட்சிகள் வெளியேறும் என்றும் அந்த கட்சிகள் மக்கள் நீதி மய்யம், அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து ஒரு பிரம்மாண்டமான மூன்றாவது கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web