இன்று முதல் பிரகாரத்தில் தொடங்கும் முதல்வர்: சூடுபிடிக்கிறது தேர்தல்!

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் திமுக இளைஞரணி செயலாலர் உதயநிதியும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர் 

இந்த நிலையில் தற்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது சொந்த தொகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். சேலம் சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் இன்று அவர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

eps

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று முதல் கட்ட பிரசாரத்தை தொடங்க இருப்பதாகவும் சேலம் மாவட்டம் முழுவதும் பிரச்சாரத்தை முடித்த பின் அவர் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

தமிழக முதல்வரின் பிரச்சாரத்தை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று பார்க்கப்படுகிறது. அதே போல் பாமக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தேமுதிக, அமமுக, உள்ளிட்ட கட்சி தலைவர்களும் விரைவில் பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் ஒரு பக்கம் அதிமுக திமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

From around the web