ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

 
stalin

தமிழகத்தில் ஊரடங்கு மே 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் மேலும் அறிவிப்பது குறித்தும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

ஏற்கனவே 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேலும் சில கடைகள் திறப்பதற்கு அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து முதல்வர் என்று ஆலோசனை செய்ய உள்ளார்

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் என்ற ஆலோசனையில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் மே 14-ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்குமா என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web