ரூ.2000 அடுத்த தவணை தேதியை அறிவித்த முதல்வர்: மக்கள் மகிழ்ச்சி

 
stalin

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற தினத்தில் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் என்பதும் அதில் ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழ்மையில் வாடும் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என்றும் அதில் ரூபாய் 2000 உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்தார் 

அதன்படி சமீபத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது., இந்த நிலையில் அடுத்த தவணை ரூபாய் 2000 எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

இதன் படி அரிசி அட்டைதாரர்களுக்கு அடுத்தகட்ட ரூபாய் 2000 ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி முதல்வர் முக ஸ்டாலின் நடந்துகொள்கிறார் என்று பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

From around the web