இன்று 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு: எந்தெந்த இணையதளங்களில் காணலாம்?

 
neet result3

பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

பிளஸ் டூ மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இருப்பினும் கல்லூரியில் சேர்வதற்கு மதிப்பெண் பட்டியல் தேவை என்பதால் மதிப்பெண் பட்டியலிடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

பத்தாம் வகுப்பில் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 50 சதவீதமும், பதினோராம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 20 சதவீதமும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 30% கணக்கிடப்பட்டு இன்று அனைத்து மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

இன்று காலை 11 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மதிப்பெண் பட்டியலை வெளியிட உள்ளார். காலை 11 மணி முதல் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து கீழ்க்கண்ட இணைய தளங்களில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் வரும் 22 ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது,

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dg2.tn.nic.in
www.dge.tn.gov.in

From around the web