ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை திடீர் வாபஸ்: காரணம் என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது தமிழின் ஊர்ப்பெயர்களில் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணையை குறித்து அமைச்சர் பாண்டியராஜன் உள்பட பலர் வரவேற்பளித்தனர் ஆனால் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இந்த ஊர் பெயர் மாற்றம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. குறிப்பாக வேலூர் என்பதை இனி வெல்லூர் என மாற்றியது குறித்து பலர் கிண்டல் அடித்து மீம்ஸ்களை பதிவு செய்து
 

ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை திடீர் வாபஸ்: காரணம் என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது

தமிழின் ஊர்ப்பெயர்களில் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணையை குறித்து அமைச்சர் பாண்டியராஜன் உள்பட பலர் வரவேற்பளித்தனர்

ஆனால் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இந்த ஊர் பெயர் மாற்றம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. குறிப்பாக வேலூர் என்பதை இனி வெல்லூர் என மாற்றியது குறித்து பலர் கிண்டல் அடித்து மீம்ஸ்களை பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஊர்ப்பெயரை மாற்றும் அரசாணை இப்பொழுது அவசியமா? என்ற கேள்வி எழும்பியது. அதுமட்டுமில்லாமல் தமிழில் உள்ள ஊர் பெயர்களே இன்னும் சரியாக இல்லாமல் இருக்கும் போது அதற்குள் ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது

இதனை அடுத்து தற்போது தமிழகத்தின் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டபின் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web