சிறையை அடுத்து சஸ்பெண்ட்: உதித் சூர்யா தந்தைக்கு நெருக்கடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நேற்று கைது செய்த சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது இதனையடுத்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இருவரையும் ஆஜர் செய்தனர். நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர
 
சிறையை அடுத்து சஸ்பெண்ட்: உதித் சூர்யா தந்தைக்கு நெருக்கடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நேற்று கைது செய்த சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது

இதனையடுத்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இருவரையும் ஆஜர் செய்தனர். நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மகனை டாக்டராக்க வேண்டும் என்பதால் தவறான வழியில் செயல்பட்ட டாக்டர் வெங்கடேசன் தற்போது சிறையில் இருப்பது மட்டுமின்றி சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு டாக்டரே தனது மகனை தவறான வழியில் மருத்துவ சீட் பெற்றது அவருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது

From around the web