சுபஸ்ரீ மரணம் அடைந்த வழக்கு: முக்கிய குற்றவாளி ஜெயகோபால் கைது!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்., ஜெயகோபால் மீது சுபஸ்ரீ வழக்கில் கடந்த 14ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென ஜெயகோபால் தலைமைறைவானார். இதனையடுத்து கடந்த 13 நாட்களாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் இன்று அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை என்ற பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் ஜெயகோபால் தலைமறைவாக இருப்பதாக செய்தி வெளிவந்தன இதனையடுத்து தேன்கனிக்கோட்டை விரைந்த தனிப்படை
 

சுபஸ்ரீ மரணம் அடைந்த வழக்கு: முக்கிய குற்றவாளி ஜெயகோபால் கைது!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.,

ஜெயகோபால் மீது சுபஸ்ரீ வழக்கில் கடந்த 14ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென ஜெயகோபால் தலைமைறைவானார்.

இதனையடுத்து கடந்த 13 நாட்களாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் இன்று அவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை என்ற பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் ஜெயகோபால் தலைமறைவாக இருப்பதாக செய்தி வெளிவந்தன

இதனையடுத்து தேன்கனிக்கோட்டை விரைந்த தனிப்படை போலீசார் தனியார் விடுதியில் ஜெயகோபாலை கைது செய்தனர்.

ஜெயகோபால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதால் இவருடைய கைது இந்த வழக்கில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது

From around the web