சுபஸ்ரீயா? ஜெயஸ்ரீயா? குழப்பத்தில் விஜய் தந்தை!

எனது மகன் விஜய் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்ததாக கூறிய விஜய்யின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் சுபஸ்ரீ மரணம் என்பதற்கு பதிலாக ஜெயஸ்ரீ மரணம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் என்பவர் விபத்தில் சிக்கி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை நேரில் சந்தித்து
 

சுபஸ்ரீயா? ஜெயஸ்ரீயா? குழப்பத்தில் விஜய் தந்தை!

எனது மகன் விஜய் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்ததாக கூறிய விஜய்யின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் சுபஸ்ரீ மரணம் என்பதற்கு பதிலாக ஜெயஸ்ரீ மரணம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் என்பவர் விபத்தில் சிக்கி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமூக சிந்தனையோடு சில கருத்துக்களை தெரிவிக்கிறோம் அதற்காக விஜய் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைக்கவில்லை என கூறினார்.

From around the web