சிரஞ்சீவியின் பேச்சை கமலும் ரஜினியும் கேட்க வேண்டும்: சீமான்


கமல், ரஜினி இருவரும் அரசியலுக்கு வரவேண்டாம் என்றும், தான் அரசியலில் சேர்ந்து கசப்பான அனுபவங்களை பெற்றதாகவும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் கூறியிருந்தார்.
சிரஞ்சீவியின் அறிவுரையை ஏற்றுக்கொள்வேன் என கமல் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இதுகுறித்து இன்று சீமான் அளித்த பேட்டியில், ‘முதன்மை நடிகராக இருந்து சிரஞ்சீவியால் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்பதால் தான், தமது நண்பர்களான ரஜினி மற்றும் கமலுக்கு அரசியல் வேண்டாம் என அவர் கூறியுள்ளதாகவும் அவருடைய பேச்சை இருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சீமான் கூறியுள்ளார்.

மேலும் அதே நேரத்தில் கண்முன் நடக்கும் ஒரு பிரச்சினைக்கு நடிகர் விஜய் குரலெழுப்பி பேசுவதை தாங்கள் வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.