போராட்டம் அறிவித்துவிட்டு கைவிடுவது ஸ்டாலினின் வழக்கமான வேலை: அமைச்சர் காமராஜ்

திமுக தலைவர் முக ஸ்டாலின் தினமும் ஒரு போராட்டத்தை அறிவிப்பார், பின் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கைவிடுவார் என மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் பேட்டி அளித்துள்ளார். மேலும் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் பாடத்திட்டத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்துவிட்டு பின் திடீரென பின்வாங்கிய ஸ்டாலின், சமீபத்தில் ஒரே நாடு ஒரே மொழி என அமித்ஷா பேசியதற்கு எதிராக ஒரு போராட்டத்தை அறிவித்துவிட்டு
 

போராட்டம் அறிவித்துவிட்டு கைவிடுவது ஸ்டாலினின் வழக்கமான வேலை: அமைச்சர் காமராஜ்

திமுக தலைவர் முக ஸ்டாலின் தினமும் ஒரு போராட்டத்தை அறிவிப்பார், பின் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கைவிடுவார் என மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் பாடத்திட்டத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்துவிட்டு பின் திடீரென பின்வாங்கிய ஸ்டாலின், சமீபத்தில் ஒரே நாடு ஒரே மொழி என அமித்ஷா பேசியதற்கு எதிராக ஒரு போராட்டத்தை அறிவித்துவிட்டு பின் அதனை திடீரென கைவிட்டார்.

இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து பகவத் கீதையை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 1ம் தேதி திமுக போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த போராட்ட அறிவிப்பு குறித்து கருத்து கூறிய அமைச்சர் காமராஜ், ‘முக ஸ்டாலின் தினமும் ஒரு போராட்டத்தை அறிவிப்பார், பின் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கைவிடுவார் என தெரிவித்தார்.

From around the web