நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தலைமறைவாக இருந்த மாணவர் இர்பான் கைது!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்ஃபான் என்பவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் காவல்துறையினர்களிடம் சரண் அடைந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் இர்பான் ஆஜர்செய்யப்பட்ட நிலையில் அவரை அக்டோபர் 9 வரை சிறையிலடைக்க சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது நீட் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களில் ஒருவர் இர்பான். இவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய முயன்றபோது திடீரென இவர் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது இதனையடுத்து மொரிஷீயஸ் நாட்டு காவல்துறையினர்களிடம்
 

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தலைமறைவாக இருந்த மாணவர் இர்பான் கைது!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்ஃபான் என்பவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் காவல்துறையினர்களிடம் சரண் அடைந்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இர்பான் ஆஜர்செய்யப்பட்ட நிலையில் அவரை அக்டோபர் 9 வரை சிறையிலடைக்க சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

நீட் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களில் ஒருவர் இர்பான். இவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய முயன்றபோது திடீரென இவர் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது

இதனையடுத்து மொரிஷீயஸ் நாட்டு காவல்துறையினர்களிடம் தொடர்பு கொண்டு இர்பான் தமிழகம் வரவழைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web