விழுப்புரம் அருகே தொலைந்து போன குளம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஒரு திரைப்படத்தில் வடிவேலு என் கிணற்றை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து ரணகளம் செய்திருப்பார். அதேபோல் விழுப்புரம் அருகே ஒரு குளத்தையே காணவில்லை என அந்த பகுதி மக்கள் தாக்கல் செய்த ஒர் வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் அருகே குளம் ஒன்று காணாமல் போனதாக சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குளம் காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதுகுறித்து அனைத்து ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக
 

விழுப்புரம் அருகே தொலைந்து போன குளம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஒரு திரைப்படத்தில் வடிவேலு என் கிணற்றை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து ரணகளம் செய்திருப்பார். அதேபோல் விழுப்புரம் அருகே ஒரு குளத்தையே காணவில்லை என அந்த பகுதி மக்கள் தாக்கல் செய்த ஒர் வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் அருகே குளம் ஒன்று காணாமல் போனதாக சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குளம் காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதுகுறித்து அனைத்து ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குளம், ஏரி, கண்மாய்கள் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கல்லூரிகளும் அபார்ட்மெண்ட் கட்டிடங்களும் கட்டப்பட்டு வரும் நிலையில் நீதிமன்றங்கள் தலையிட்டு நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web