திமுகவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ? நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுகவின் அப்பாவு தாக்கல் செய்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்
 
திமுகவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ? நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுகவின் அப்பாவு தாக்கல் செய்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் இந்த அதிரடியாக தீர்ப்பை வழங்கியுள்ளது

இந்த தீர்ப்பின்படி மறு வாக்கு எண்ணிக்கை விரைவில் நடத்தப்படும் என தெரிகிறது. அவ்வாறு நடத்தப்படும் மறு வாக்கு எண்ணிக்கையில் அப்பாவு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே திமுகவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web