மெட்ரோவில் பயணம் செய்ய பணம் தேவையில்லை, குப்பை இருந்தால் போதும்!

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பணம் தேவையில்லை, பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு இத்தாலியில் என்பது குறிப்பிடத்தக்கது சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை ஒப்படைத்துவிட்டு மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என இத்தாலி மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள சான் ஜியோவானி மெட்ரோ நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து நாடு முழுவதும்
 

மெட்ரோவில் பயணம் செய்ய பணம் தேவையில்லை, குப்பை இருந்தால் போதும்!

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பணம் தேவையில்லை, பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு இத்தாலியில் என்பது குறிப்பிடத்தக்கது

சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை ஒப்படைத்துவிட்டு மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என இத்தாலி மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள சான் ஜியோவானி மெட்ரோ நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது

மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள Mycicero என்ற செயலியின் பார்கோடை ஸ்கேன் செய்து, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி இயந்திரத்துக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை செலுத்தினால் அவர்களுடைய மெட்ரோ பயண அட்டையில் பயணத்துக்கான பணம் கிரெடிட் செய்யப்படும். அதனை வைத்து அவர்கள் மெட்ரோவில் பயணம் செய்து கொள்ளலாம். இத்தாலியின் சுற்றுச்சூழல்துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இதேபோன்று சென்னை உள்பட இந்தியாவின் மெட்ரோவிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆகும்

From around the web