பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது தவறில்லை:டிடிவி தினகரன்

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதையை ஒரு பாடத்திட்டமாக வைக்கும் அறிவிப்பு ஒன்று வெளிவந்தது. இதனையடுத்து எதிர்பார்த்தது போலவே தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. இந்த நிலையில் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு மரியாதை செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,
 

பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது தவறில்லை:டிடிவி தினகரன்

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதையை ஒரு பாடத்திட்டமாக வைக்கும் அறிவிப்பு ஒன்று வெளிவந்தது. இதனையடுத்து எதிர்பார்த்தது போலவே தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது.

இந்த நிலையில் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு மரியாதை செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

From around the web