இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி மர்ம மரணம்!

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி சுரேஷ்குமார் என்பவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்குமாரின் மனைவி சென்னை வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறது. மேலும் ஒரு மகன் அமெரிக்காவிலும், ஒரு மகள் டில்லியிலும் வசித்து வரும் நிலையில் இவர் ஐதராபாத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சுரேஷ்குமாரின் மனைவி தொலைபேசியில் பலமுறை தொடர்பு
 

இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி மர்ம மரணம்!

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி சுரேஷ்குமார் என்பவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்குமாரின் மனைவி சென்னை வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறது. மேலும் ஒரு மகன் அமெரிக்காவிலும், ஒரு மகள் டில்லியிலும் வசித்து வரும் நிலையில் இவர் ஐதராபாத்தில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சுரேஷ்குமாரின் மனைவி தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லாததால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்க சொல்லியுள்ளார். வீடு தட்டப்பட்டும் திறக்காத நிலையில், எஸ்.ஆர். போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ், சடலமாக கிடந்தது தெரிய வந்தது. சுரேஷின் தலையில் பலத்த காயம் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது

From around the web