ஆடியோ விழாவிற்கு டிக்கெட் விற்பனையா? நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

திரைப்பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகள் அதில் நடிக்கும் நடிகர்களின் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் அதற்கான டிக்கெட்டுகள் பொதுமக்களுக்காக விற்கப்படுவதில்லை என்றும் மீறி விற்பனை செய்ததாக புகார் வந்தால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ‘பிகில்’ ஆடியோ விழாவில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.இதனையடுத்து இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, இது பற்றி புகார்கள் எதுவும் வந்தால் அரசு பரிசீலனை செய்யும்
 

ஆடியோ விழாவிற்கு டிக்கெட் விற்பனையா? நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

திரைப்பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகள் அதில் நடிக்கும் நடிகர்களின் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் அதற்கான டிக்கெட்டுகள் பொதுமக்களுக்காக விற்கப்படுவதில்லை என்றும் மீறி விற்பனை செய்ததாக புகார் வந்தால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ‘பிகில்’ ஆடியோ விழாவில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.இதனையடுத்து இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, இது பற்றி புகார்கள் எதுவும் வந்தால் அரசு பரிசீலனை செய்யும் என்று கூறினார்.

மேலும் திரைப்படங்கள் வெளியாகின்ற நேரங்களில் திரையரங்குகளை கட்டுப்படுத்தும் ஆலோசனைகள், அறிவுரைகள் அரசு சார்பில் வழங்கி உள்ளதாகவும், திரைத்துறையினர் அதை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

From around the web