ப.சிதம்பரத்தை கண்டதும் கண் கலங்கினேன்: வைரமுத்து

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் ஜாமீன் மனு விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்திற்கு இன்று கவிஞர் வைரமுத்து வருகை தந்திருந்தார். டெல்லியில் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்த பின் வைரமுத்து பேட்டி அளித்த வைரமுத்து, ‘ப.சிதம்பரத்தை நான் கண்டதும் கண் கலங்கினேன்; அவர் மன உறுதியுடன் நின்றார்; அவரது உடல்நிலை, தொண்டு கருதி
 

ப.சிதம்பரத்தை கண்டதும் கண் கலங்கினேன்: வைரமுத்து

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் ஜாமீன் மனு விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்திற்கு இன்று கவிஞர் வைரமுத்து வருகை தந்திருந்தார். டெல்லியில் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்த பின் வைரமுத்து பேட்டி அளித்த வைரமுத்து, ‘ப.சிதம்பரத்தை நான் கண்டதும் கண் கலங்கினேன்; அவர் மன உறுதியுடன் நின்றார்; அவரது உடல்நிலை, தொண்டு கருதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பின்போது ப. சிதம்பரம் ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’.. என்ற குறளை வைரமுத்துவிடம் மேற்கோள் காட்டியதாகவும், அதற்கு கவிஞர் வைரமுத்து ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ என்ற குறளை மேற்கோள் காட்டி, தைரியமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web