சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் 5 திபெத்தியர்கள் கைது!

சீன அதிபர் இன்று சென்னை அருகேயுள்ள மாமல்லபுரம் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சென்னையில் தங்கவுள்ள கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் திடீரென கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு வந்த போலீசார் கோஷமிட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது இன்னும் ஒருசில திபெத்தியர்கள் சென்னையில் இருப்பதாகவும்,
 

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் 5 திபெத்தியர்கள் கைது!

சீன அதிபர் இன்று சென்னை அருகேயுள்ள மாமல்லபுரம் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சென்னையில் தங்கவுள்ள கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் திடீரென கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு வந்த போலீசார் கோஷமிட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது

இன்னும் ஒருசில திபெத்தியர்கள் சென்னையில் இருப்பதாகவும், அவர்கள் கோஷமிட்டால் உடனடியாக கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web