சீன அதிபரை வரவேற்க சென்னை வந்தார் பிரதமர் மோடி!

சீன அதிபர் இன்று சென்னை வரவுள்ள நிலையில் அவரை வரவேற்க சற்றுமுன் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்றும் பிரதமர் மோடி
 

சீன அதிபரை வரவேற்க சென்னை வந்தார் பிரதமர் மோடி!

சீன அதிபர் இன்று சென்னை வரவுள்ள நிலையில் அவரை வரவேற்க சற்றுமுன் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஈ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகளில் அனைத்துவித போக்குவரத்துகளும் தற்போது நிறுத்தப்பட்டு, போலீசாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது..

சீன அதிபர் வருகை : சென்னை பரங்கிமலை, மீனம்பாக்கம், கிண்டி, கத்திப்பாரா பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்க போலீசார் அறிவுறுத்தல்..

From around the web