மோடி- ஜி ஜிங்பிங் கோவளத்தில் சந்திப்பு

நேற்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் சென்னை மற்றும் மாமல்லபுரம் வருகை தந்த நிலையில் இன்று சீன அதிபர் கோவளம் சென்றார். கோவளத்தில் நேற்றிரவு தங்கியிருந்த பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்றார். பின்னர் பேட்டரி வாகனத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் உரையாடியபடி பயணம் மேற்கொண்டனர். இன்று கோவளத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றனர். சீன அதிபரின் இந்த பயணம் ஒரு நட்புமுறை பயணம்
 

மோடி- ஜி ஜிங்பிங் கோவளத்தில் சந்திப்பு

நேற்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் சென்னை மற்றும் மாமல்லபுரம் வருகை தந்த நிலையில் இன்று சீன அதிபர் கோவளம் சென்றார்.

கோவளத்தில் நேற்றிரவு தங்கியிருந்த பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்றார். பின்னர் பேட்டரி வாகனத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் உரையாடியபடி பயணம் மேற்கொண்டனர்.

இன்று கோவளத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றனர்.

மோடி- ஜி ஜிங்பிங் கோவளத்தில் சந்திப்பு

சீன அதிபரின் இந்த பயணம் ஒரு நட்புமுறை பயணம் என்பதால் இந்த பயணத்தில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்துகின்றனர்.

இருதரப்பில் இருந்து எந்தவித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு மட்டுமின்றி உலக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

மோடி- ஜி ஜிங்பிங் கோவளத்தில் சந்திப்பு

முன்னதாக இன்று காலை கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் அங்குள்ள குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web