விக்கரவாண்டி, நாங்குநேரி கருத்துக்கணிப்பு முடிவில் ஆச்சரியம்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய பகுதிகளுக்கும் புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது இந்த முடிவின்படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் ஆகிய
 

விக்கரவாண்டி, நாங்குநேரி கருத்துக்கணிப்பு முடிவில் ஆச்சரியம்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய பகுதிகளுக்கும் புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது

இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது

இந்த முடிவின்படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கருத்துக் கணிப்புக்கள் பொய்யாகிவிடுவதே தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பாவது சரியாக இருக்குமா அல்லது இதுவும் பொய்யாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்ற நிலை கடந்த பல வருட தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web